என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கற்பழிப்பு வழக்கில் இந்திய கிரிக்கெட் வீரர் கைதா?: வெளியுறவுத்துறை விளக்கம்
By
மாலை மலர்19 Jun 2016 9:32 AM GMT (Updated: 19 Jun 2016 9:32 AM GMT)

ஹராரே ஓட்டலில் தன்னை இந்திய கிரிக்கெட் வீரர் கற்பழித்து விட்டார் என பெண் ஒருவர் கொடுத்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடர் கடந்த 15-ந்தேதியுடன் முடிவடைந்து, நேற்று டி20 தொடர் தொடங்கியது. போட்டி அனைத்தும் ஹராரேயில் நடைபெறுவதால் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த இந்திய கிரிக்கெட் ஒருவர் என்னை கற்பழித்து விட்டார் என்று ஜிம்பாப்வே பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டதை உறுதி செய்த ஜிம்பாப்வே துணை கமிஷனர் சாரிட்டி சரம்பா இதுகுறித்து கூறுகையில் ‘‘இந்திய நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார். நாங்கள் விசாரணை நடத்தியுள்ளோம். இந்த வழக்கு கோர்ட்டுக்கு கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். அவரை சனிக்கிழமை (நேற்று) கோட்டில் ஆஜர் படுத்தினோம்’’ என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வீரரின் பெயரை ரகசியமாக வைத்திருப்பதாகவும, இது உண்மை என்றால் இந்தியா- ஜிம்பாப்வேயிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என்றும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புகழுக்கு பெரிய தீங்கு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மற்றொரு செய்தில் போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், ஆசியாவைச் சேர்ந்த ஒரு வி.ஐ.பி., வீரரை கைது செய்வதில் இருந்து விடுவிக்க முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஹோட்டல் வரவேற்பறையில் இருந்து வந்த செய்தில் ‘‘அந்த பெண் போதைப்பொருள் உட்கொண்டு, அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருந்தார்’’ என்று கூறப்படுகிறது.
புகார் அளித்த பெண் கூறுகையி்ல் ‘‘நான் வீரரின் அறையில் இருந்து எழுந்தேன். நான் அங்கே எப்படி சென்றேன் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்றார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தீவிரமாக விசாரணை நடத்தியது. இறுதியில் ‘‘கிரிக்கெட் வீரர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார் என்று வந்த செய்தி முற்றிலும் தவறானது. ஜிம்பாப்வேயிற்கான இந்திய தூதர் இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வருகிறார்’’ என்று கூறியுள்ளது.

Next Story
×