என் மலர்
செய்திகள்

தற்போதைய ‘டிஆர்எஸ்’ 100 சதவீதம் சரியானதல்ல: ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகர்
டெஸ்ட் மற்றும் ஐ.சி.சி. நடத்தும் முக்கியமான போட்டிகளில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறை பயன்படுத்தும்போது சில அணிகளுக்கு பாதகமாக அமைந்து விடுகிறது. இந்தமுறை 100 சதவீதம் சரியானதல்ல என ஷசாங்க் தெரிவித்துள்ளார்
மும்பை:
கிரிக்கெட்டில் மைதான நடுவர்கள் சிலநேரம் கொடுக்கும் தீர்ப்பு தவறானதாகிவிடுகிறது. இதை சரிசெய்ய டிஆர்எஸ் முறை கொண்டு வரப்பட்டது. இந்த முறையில் நடுவர் தீர்ப்பை மறுஆய்வு செய்து 3-வது நடுவர் தீர்ப்பு வழங்குவார்.
பந்து கால் பேடை தாக்கும்போது நடுவர் எல்.பி.டபிள்யூ. என அறிவிப்பார். இந்த தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் பேட்ஸ்மேன் 3-வது நடுவரை அனுகலாம். அப்படி அணுகும்போது டிஆர்எஸ் முறையில் பந்து பேடை ஊடுருவி ஸ்டம்பை தாக்குகிறதா? அல்லது ஸ்டம்பை விட்டு விலகிச் செல்கிறதா? என்று ஆராய்வார். இப்படி ஆராய்வதால் 100 சதவீதம் சரியாக இருக்காது என்று இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
டிஆர்எஸ் என் சாப்ட்வேர் முறையை பயன்படுத்துவது ஒரு மனிதன்தான். கடவுள் அல்ல என இந்தியா புறக்கணித்தது. ஆனால், கேட்ச் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம் என்று இந்தியா கூறியது. ஆனால் ஐ.சி.சி., டிஆர்எஸ்-ஐ உபயோகித்தால் அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியது.
இதனால் இந்தியா விளையாடும் போட்டிகளில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படுவதில்லை. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷசாங்க் மனோகர் இந்த முடிவில் உறுதியாக இருந்தார்.
தற்போது அவர் ஐ.சி.சி. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.சி.சி. தலைவராக இருந்தாலும் டிஆர்எஸ் முறை 100 சதவீதம் சரியானதல்ல என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஷசாங்க் மனோகர் கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தாலும், ஐ.சி.சி. தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் டிஆர்எஸ் முறையில் எனக்கு அதே நிலைதான். பி.சி.சி.ஐ. தலைவராக இருந்தபோது எல்.பி.டபிள்யூ. முறைக்கு தற்போது இருக்கும் டிஆர்எஸ் முறையை ஏற்கமுடியாது என்று கூறினேன்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், என்னுடைய காலக்கட்டத்தில் பி.சி.சி.ஐ. எப்பதுமே டிஆர்எஸ் முறைக்கு எதிரானதல்ல. டிஆர்எஸ் முறையில் எல்பிடபிள்யூ-வில் மட்டும்தான் பிரச்சினை உள்ளது. இதைத்தவிர மற்ற அனைத்தையும் ஏற்கத்தயார். ஆனால், டிஆர்எஸ் முறையை முழுவதுமாக ஏற்க வேண்டும். அல்லது முழுவதும் ஏற்க வேண்டாம் என்று ஐ.சி.சி. கூறிவிட்டது. எல்பிடபிள்யூ முறைக்கா நாம் அதை ஏற்க முன்வரவில்லை’’ என்றார்.

Next Story