என் மலர்
செய்திகள்

ஆயிரம் ரன்னை கோலி தொடுவாரா?
இந்த ஐ.பி.எல். சீசனில் வீராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவர் 13 ஆட்டத்தில் விளையாடி 865 ரன்கள் குவித்து உள்ளார். சராசரி 86.50 ஆகும். ஸ்டிரைக்ரேட் 155.01.
4 சதமும், 5 அரைசதமும் அடித்துள்ளார். அவரது 865 ரன் குவிப்பில் 72 பவுண்டரிகளும், 36 சிக்சர்களும் அடங்கும். டெல்லிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 135 ரன்கள் குவித்தால் அவர் ஆயிரம் ரன்னை தொடுவார். மிகவும் நல்ல நிலையில் இருப்பதால் அவரது அதிரடியான ஆட்டம் இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆட்டத்தில் தவறவிட்டால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறினால் மட்டுமே ஆயிரம் ரன்னை தொடமுடியும். வீராட் கோலிக்கு அடுத்தப்படியாக டேவிட் வார்னர் 640 ரன்னும், டிவில்லியர்ஸ் 597 ரன்னும் எடுத்துள்ளனர்.
அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் மெக்லகன் முதலிடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரரான அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார். யசுவேந்திர ஷால், வாட்சன் (பெங்களூர்), புவ னேஸ்வர்குமார் (ஐதராபாத்) ஆகியோர் தலா 16 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.