என் மலர்
செய்திகள்

கோலியின் அபார சதத்தால் புனேவை வீழ்த்தியது பெங்களூர்
பெங்களூரில் இன்று நடைபெற்ற புனே- பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தால் பெங்களூர் அணி 192 இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது
பெங்களூர்:
ஐ.பி.எல். தொடரின் இன்றைய முதல் போட்டியில் பெங்களூர்- புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டோனி அணி முதலில் பேட்டிங் செய்தது. ரகானே (74), சவுரப் திவாரி (52) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் புனே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணி சார்பில் வாட்சன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். புனே அணியினர் நேர்த்தியான முறையில் பந்து வீசியதால் கோலி மற்றும் ராகுலால் முதலில் அதிரடியாக விளையாட முடியவில்லை. இதனால் பெங்களூர் அணி 7 ஓவரில்தான் 50 ரன்னைத் தொட்டது. விராட் கோலி 31 பந்தில் அரைசதம் அடித்தார்.
அணியின் ஸ்கோர் 11.1 ஓவரில் 94 ரன்னாக இருக்கும்போது ராகுல் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த டி வில்லியர்ஸ் 3 பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது பெங்களூர் அணி 12 ஓவரில் 97 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது அந்த அணிக்கு ஒரு ஓவரில் 12 ரன்களுக்கு மேல் தேவைப்பட்டது.
3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். வாட்சன் புனே அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். அவர் 13 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 36 ரன்கள் குவித்தார். அப்போது பெங்களூர் அணியின் வெற்றிக்கு 27 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது விராட் கோலி 42 பந்தில் 64 ரன்கள் எடுத்திருந்தார். 17-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் 7 ரன்கள் எடுத்தனர். இதனால் கடைசி 18 பந்தில் 40 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை ஆடம் சம்பா வீசினார். இந்த ஓவரில் விராட் கோலி இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் பெங்களூர் அணி இந்த ஓவரில் 18 ரன்கள் சேர்த்தது.
கடைசி இரண்டு ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை ஆர்.பி. சிங் வீசினார். இந்த ஓவரின் கடைசி இரண்டு பந்தில் இரண்டு சிக்சர் பறக்க விட்டார் கோலி. அத்துடன் 56 பந்தில் சதமும் அடித்தார். இந்த ஓவரில் 18 ரன்கள் கிடைத்ததால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
கடைசி ஓவரின் 3-வது பந்தை கோலி பவுண்டரிக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். பெங்களூர் அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Next Story