என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்
    X

    பஞ்சாப் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ்

    ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 190 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
    மொகாலி:

    ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

    இதனையடுத்து மும்பை அணியின் ரோகித் சர்மாவும், பார்த்தீவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் பட்டேலுடன், ராயுடு ஜோடி சேர்ந்தார். முதலில் இந்த ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது.

    மும்பை அணி 6 ஓவர்களில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் அதிரடியாக விளையாடிய ராயுடு 31 பந்துகளிலும், பட்டேல் 41 பந்துகளிலும் அரைசதம் எடுத்தனர்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ராயுடு 65(37) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் குவித்தது. இதனையடுத்து பட்டேலுடன், பட்லர் ஜோடி சேர்ந்தார்.

    பட்லர் 24(13) ரன்களில் ஆட்டமிழக்க அதனையடுத்து, சிறப்பாக விளையாடி வந்த பட்டேல் 81(58) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது.

    பஞ்சாப் அணி தரப்பில் அக்சர் பட்டே 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். சந்தீப் சர்மா 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதனையடுத்து, பஞ்சாப் அணி 190 ரன்கள் இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.

    Next Story
    ×