என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மவுனமாய் இருப்பது தவறாகாது
    X

    மவுனமாய் இருப்பது தவறாகாது

    • உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது
    • புரதமிக்க காலை உணவு

    எது நடந்தாலும் அது உங்கள் மனதினை பாதிக்கும்படியாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

    * பிறரது முறையற்ற செயல்கள் அவர்கள் குணத்தினை காட்டுகின்றது. அது உங்களுடையது அல்ல.

    * எல்லோரும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணாதீர்கள்.

    * நீங்கள் சில இடங்களில் ஒதுக்கப்பட்டால் அது உங்கள் மதிப்பினை குறைக்காது.

    * ஒருவருக்கு அவரவர் மன நிம்மதியே முக்கியம்.

    * மவுனமாய் இருப்பது தவறாகாது.

    * எல்லோருக்கும் நம்மை பிடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

    * பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கின்றார் என்று ஏன் எடை போடுகின்றோம்.

    * அழிவுப்பூர்வமான சிந்தனைகளில் மூழ்கக் கூடாது.

    நீங்கள்

    * நாள் முழுவதும் வீட்டின் அறையின் உள்ளேயே அடைந்து கிடக்கின்றீர்களா?

    * நாள் முழுவதும் அதிகம் நகராது உட்கார்ந்தோ, படுத்தோ இருக்கின்றீர்களா?

    * சம்பாதிப்பதனை விட அதிகம் செல வழிக்கின்றீர்களா?

    * பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

    * பிறருடன் உங்களை ஒப்பிட்டு வருந்துகின்றீர்களா? இந்த மேற்கூறிய அறிகுறிகள் நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதனைக் காட்டுகின்றது.

    இதனை மாற்றி மகிழ்ச்சியாக இருக்க

    * தினமும் சிறிது நேரம் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள்

    * நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள்.

    * தேவையானதிற்கு மட்டும் செலவழியுங்கள்.

    * பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

    * 5 நிமிடமாவது தினம் ஓடுங்கள், படியுங்கள், எழுதுங்கள்.

    * உங்கள் சுற்று சூழ்நிலை, உங்கள் பழக்க வழக்கங்கள், உங்கள் நண்பர்கள், உங்கள் பொழுது போக்குகள் இவற்றினை வைத்தே உருவாகுகின்றது.

    Gut Feeling: இதனை உள்ளுணர்வு. என்று சொல்லலாம். திடீரென தோன்றும். யோசிக்காமல், ஆராயாமல் வேகமாக வரும் உள்ளுணர்வு பல முக்கியமான, ஆபத்தான தருணங்களில் இது ஒரு வழி காட்டியே. பலருக்கு ஏதோ வயிற்றில் சங்கடம், படபடப்பு என வெளிப்படுத்தும் நன்மையோ, தீமையோ அறிகுறியாய் உணர்த்துவது.

    தியானம், யோகா, முறையான உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஆன்மீகத்தில் இந்த உணர்வினை ஆன்மாவோடு தொடர்பு உடையது என்பர்.

    உங்களிடம் நீங்களே பொய் சொல்வதிைன நிறுத்துங்கள் என்று ஒரு புத்தகம் உள்ளது. அதில் சில வரிகளைப் பார்ப்போம்.

    நான் இன்னமும் கூடுதலாக, மிகச் சரியாக இருந்தால் தான் மற்றவர்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள் என்று தன்னைத் தானே குறை சொல்வது தீராத மன உளைச்சலை உண்டாக்கும். வாழ்வில் முன்னேற்றம் தேவை என்ற உண்மையினை இவர்கள் உணர வேண்டும்.

    * 'எனக்கு நேரமே இல்லை' இது பொதுவில் அநேகர் சொல்வதுதான். சிலருக்கு இது உண்மையானதாக இருக்கலாம். ஆனால் பலருக்கு தன் சக்தி, கவனம் இதனை முறையாக செலவழிக்காததால் ஏற்படும் குறைபாடுதான் இது. கவனம், சக்தி இதனை சீராக செலவழித்தால் நேரமில்லை என்று நாம் சொல்ல மாட்டோம்.

    * நான் இந்த பொறுப்பை ஏற்க வேலையைச் செய்ய தகுதி இல்லாதவன் என்று அநேகருக்கு மனதில் இந்த எண்ணம் வேரூன்றி இருப்பதால் சில முயற்சிகளைப் பற்றி சிந்திக்காது கூட இருப்பார்கள்.

    நம்மை நாம் ஆய்ந்து அளவிடுவது சரியே. ஆனால் பல நேரங்களில் குறைத்து மதிப்பிட்டு ஒரு வட்டத்தினை விட்டு வெளிவர மறுக்கின்றோம்.

    * என்னால் மாற முடியாது. மாற்றிக் கொள்ள முடியாது என்பதும் நாம் அடிக்கடி கேட்கும் பொதுவான வார்த்தைகள். சிறு விஷயங்களில் கூட மாற முயற்சிக்காத இவர்கள் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான்.

    இவ்வாறு அநேக செய்திகள் இதில் உள்ளன. நான் படித்த சிலவற்றினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சிந்தித்துப் பார்ப்போமே.

    பலர் எதற்கெடுத்தாலும்அதிக கவலைப் படுவார்கள். இவர்களை மாற்றுவது மிக கடினமாக இருக்கும். இவர்கள் தானே தன்னை மாற்றிக் கொள்ள அல்லது அதிகம் கவலைப்படாமல் இருக்க சில முயற்சிகளை செய்ய வேண்டும்.

    * முறையான தூக்கமின்மை கவலையின் தாக்கத்தினை அதிகப்படுத்தும். தினம் 8 மணி நேர தூக்கம் என்பது அவசியம்.

    * காபி, டீ பானங்கள் உடல் பாதிப்பினை ஏற்படுத்தி கவலையின் அழுத்தத்தினைக் கூட்டும்.

    * சக்திக்கு மீறிய மிக அதிக உழைப்பு உடல், மனம் இரண்டினையும் பாதிக்கும்.

    * சர்க்கரை அதிகம் சேர்ப்பது, உயர் சர்க்கரை, குறைந்த சர்க்கரை இவை மன பதட்டத்தினையும் ஏற்படுத்தும்.

    * ஆல்கஹால்- இதனால் ஏற்படும் உடல் நலக்ேகடு எண்ணற்றது. கூடவே இவர்கள் எப்போதும் மனநல பாதிப்புடன் இருப்பார்கள்.

    * மேற்கூறியதே புகைப்பிடிப்பவர்களுக்கும் பொருந்தும்.

    * உடற்பயிற்சி செய்யாதவர்கள் காரணமின்றி கவலையுடன் இருப்பர்.

    * அதிகமாக 'டயட்'டில் இருக்கிறேன் என்ற பெயரில் மிகக்குறைந்த கலோரி, சத்தில்லா உணவு என எடுத்துக் கொள்பவர்கள் எப்போதும் சோர்வாகவும், கவலையுடனும் இருப்பார்கள்.

    * மிக அதிகம் டி.வி., செல்போன் என மூழ்குபவர்கள் மனமகிழ்ச்சி இன்றி வாழ்வில் ஏதோ இழந்தது போல் இருப்பார்கள்.

    * ஒமேகா-3 உடலில் தேவையான அளவு சேராதபோது ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் இல்லாது இருப்பர்.

    * வைட்டமின் 'டி' சத்து குறைபாடாலும் மனச்சோர்வு, உடல் சோர்வு, கவலை என ஏற்படும்.

    * ஆழ் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

    * 20 நிமிட சூரிய ஒளி அவசியம்

    * 20 நிமிடமாவது போனில் இருந்து தள்ளி இருக்க வேண்டும்.

    * 20 நிமிடங்களாவது சுறுசுறுப்பாய் நடக்க வேண்டும்.

    * புரதமிக்க காலை உணவு

    * வெதுவெதுப்பான நீர் காலையில் அருந்துதல்

    * கண் பயிற்சி ஆகியவைகளை கடைப் பிடிப்பது உடல் ஆரோக்கியத்தினை கூட்டுவதோடு கவலைப்படும் குணத்தினையும் வெகுவாய் குறைக்கும்.

    மேலும்

    * காபியினை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது

    * கிரீன் டீ இரவில் குடிக்கக் கூடாது

    * சக்தி பானம் என அடிக்கடி குடிக்க வேண்டாம்.

    * மது எப்பொழுதும் வேண்டாம். உடற் பயிற்சி செய்தவுடன் சிலர் மது பருகுகின்றனர். இது மிகவும் தீங்கானது.

    * உணவுக்குப் பிறகு குளிர்ந்த நீர் பருகக் கூடாது

    இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    வாழ்வில் பல துறைகளில் உள்ள பிரபலங்களைப் பார்த்து அதைப்போல் தானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுண்டு. அவர்களின் தோற்றம், கம்பீரம், ஸ்டைல், நடை, உடை, பேச்சு என பல விஷயங்களில் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் வாழ்வின் போராட் டங்களை கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். அவர்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள் இவர்கள் கண் களுக்குத் தெரிவதில்லை.

    * அவர்கள் யாரும் புரிந்து கொள்வதில்லை. மாறாக எடை மட்டுமே போடுகின்றார்கள்.

    * அவர்களுக்கு பிரச்சினையே இல்லை என்று நினைக்கின்றார்கள்.

    * பிறரின் பொறுமை அவர்களை படுத்தும்பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

    * 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிக்கப் படும்போது அவர்கள் மனமும் சோர்வடையும்.

    * தேவையில்லாமல் அதிக வெளிச்சம் அவர்கள் மீது விழுகின்றது.

    * எப்போதும் 'ஷோ கேஸ்' பொம்மை போல் சிரித்தபடி பொலிவாக இருக்க வேண்டும்.

    * உண்மையான நண்பர்கள் அரிது

    * தன் சோகங்கள், வேதனைகள் வெளியே தெரியாது வாழ வேண்டும்.

    * நிம்மதி, மகிழ்ச்சி என்பது புத்தகத்தில் காணும் சொல்லாகி விடும்.

    * அவர்களுக்கும் 'மனம்' என்ற ஒன்று இருக்கின்றது.

    * ஆக இவர்களைப் பற்றிய கற்பனைகள் வேண்டாம்.

    உங்களால் மேடையில் கோர்வையாக இரண்டு வரிகள் பேச முடியுமா? நெருப்பு வெய்யிலில் தொடர் பயணம் செய்ய முடியுமா? வயிறு, வாயினை கட்டி உடலை கட்டுப்கோப்பாக வைத்திருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

    மாறாக நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் கவனம் சிதறாத வழியில் உங்கள் வாழ்வினை முன்னேற்றிக் கொள்ளுங்கள்.

    லட்சியத்தினை அடைய விரும்புபவர்கள் செய்யும் சில தீர்க்கமான முடிவுகள்

    * எதெல்லாம் அவர்களது கவனத்தினை திசை திருப்புகின்றதோ அதனை முதலில் 'லிஸ்ட்' எடுக்கின்றனர். ஒவ்வொன்றாக கடும் முயற்சி செய்து அவைகளை நீக்குகின்றனர். முடியவில்லை என்ற சாக்குபோக்கே கிடையாது.

    * உடல் ஆரோக்கியத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். உடல் உறுதி, தன்னம்பிக்கை இவை இரண்டும் வாழ்க்கை முழுவதும் அவசியம் என்பதனை அறிந்து வைக்கின்றனர்.

    * தனக்கு இருக்கும் ஏதேனும் பலவீனத்தினை நன்கு உணர்ந்து அதனை குழி தோண்டி புதைக்கின்றனர்.

    * குறுக்கு வழியில் வெற்றிகள் அடைய எப்போதும் நினைக்க மாட்டார்கள்.

    * எளிதில் மனதளவில் காயப்படாத உறுதி கொண்டவர்கள்.

    * தனிமை அவர்களை பாதிப்பதில்லை.

    * நல்ல உதாரணமான உயர் மனிதர்களை மனதில் பதிய வைக்கின்றனர்.

    * வேலை செய்வதை 10 யானை செய்வது போல் செய்வார்கள். நல்ல முடிவுக்காக மிக பொறுமையாக காத்திருப்பார்கள்.

    * நல்ல தரமான, திறமை மிக்க மனிதர்களின் அறிவுரையினை மட்டுமே ஏற்பார்கள்.

    * தனது தீர்மானங்களை தானே முடிவெடுக்கும் திறன் இவர்களிடம் உண்டு.

    * தன் சுற்றுப்புற சூழ்நிலையினை சீராக தானே அமைத்துக் கொள்வார்கள்.

    * டி.வி., செல்போன் இவற்றில் கண்டிப்பாக மூழ்க மாட்டார்கள்.

    * எதிலும் ஒரு கட்டுப்பாடு அவர்களிடம் இருக்கும்

    * வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவர்களை ஆக்கிரமித்து இருக்கும்.

    Next Story
    ×