என் மலர்
புதுச்சேரி

ஆன்லைனில் வாங்கிய கிழிந்த காலணிக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு- புதுவை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- காலணி இரண்டாக கிழிந்ததால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார்.
- மன உளைச்சலுக்கு ஆளான சஜினா புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிராந்தியம் மாகியை சேர்ந்தவர் நிபின்ராஜ்.
இவர் தனது உறவினரும், வக்கீலுமான சஜினாவுக்கு 2024-ம் ஆண்டு ஆன்லைனில் காலணி ஆர்டர் செய்து பரிசாக வழங்கினார். அந்த காலணியை அணிந்து வக்கீல் சஜினா கோர்ட்டுக்கு சென்றார்.
அப்போது காலணி இரண்டாக கிழிந்ததால் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான சஜினா புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் காலணி தயாரித்த நிறுவனம் காலணிக்குரிய தொகை ரூ.4 ஆயிரத்து 547-ஐ வட்டியுடன் செலுத்த வேண்டும். மனஉளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
Next Story






