விடுதலை சிறுத்தை நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கு- ரவுடிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்

விசாரணை முடிந்த நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை சிறுத்தை நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கு- ரவுடிக்கு 7 ஆண்டுகள் ஜெயில்
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் வில்லேந்தி (வயது 40) விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான விநாயக மூர்த்தி (42) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் வில்லேந்தி கடந்த 9.7.2008-ம் ஆண்டு அவரது உறவினர்களான மகி, ரவிச்சந்திரன் ஆகியோருடன் நெட்டப்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது விநாயகமூர்த்தி மற்றும் அவரது கூட்டளிகள் பாக்யராஜ், ஸ்ரீதர், கிருஷ்ணன், குப்பன் ஆகியோர் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வில்லேந்தி, மகி, ரவிச்சந்திரன் ஆகியோர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி தப்பிச்சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விநாயகமூர்த்தி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி யஸ்வந்த்ராவ் இங்கர் சல் முன்னிலையில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் விநாயமூர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதத் தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மற்ற 4பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com