என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி- திகைத்து நின்ற பாதுகாப்பு அதிகாரிகள்
    X

    முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசி பெற அடம்பிடித்த போதை ஆசாமி- திகைத்து நின்ற பாதுகாப்பு அதிகாரிகள்

    • ரங்கசாமியை நோக்கி திடீரென வேகமாக ஓடி வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என கும்பிட்டபடி குனிந்து நின்றார்.
    • போதையில் இருந்த அவர் போலீசாரின் பிடியை மீறி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுவதிலேயே குறியாக இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலமைச்சா ரங்கசாமியிடம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கம்.

    முதலமைச்சர் ரங்கசாமியும் சலிக்காமல் அவர்களுக்கு தலையில் கைது வைத்து ஆசி வழங்குவார். இந்த நிலையில் புதுவை அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    புதுச்சேரி முருகா தியேட்டர் சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து உறுதி மொழி ஏற்றனர். அப்போது ஒருவர் முதலமைச்சர் ரங்கசாமியை நோக்கி திடீரென வேகமாக ஓடி வந்து ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என கும்பிட்டபடி குனிந்து நின்றார். இதில் பதட்டமான பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.

    போதையில் இருந்த அவர் போலீசாரின் பிடியை மீறி முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுவதிலேயே குறியாக இருந்தார். இதையடுத்து அவரை அப்புறப்படுத்தி சோதனை செய்தனர். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்ற பின் பாதுகாப்பு அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

    விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த அழகர் என்பதும் புதுவையில் ஒரு ஓட்டலில் தங்கி சமையல் மாஸ்டராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் புதுச்சேரி முதலமைச்சரின் எளிமை பிடித்ததால் அவரிடம் ஆசீர்வாதம் வாங்க ஓடி வந்ததாக தெரிவித்தார்.

    விடாப்பிடியாக அந்த போதை ஆசாமி அங்கிருந்து செல்ல மறுத்ததால் போலீசார் முதலமைச்சர் ரங்கசாமியின் காலில் விழுந்து அவரை ஆசீர்வாதம் பெற வைத்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×