search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் இந்தியாவில் வெளியானது
    X

    சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் இந்தியாவில் வெளியானது

    சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிக்சர் ஏபிஎஸ் வேரியன்ட் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சுசுகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜிக்சர் ஏபிஎஸ் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜிக்சர் மாடலில் பாதுகாப்பு வழங்க சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முன்பக்க சக்கரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

    வடிவமைப்பை பொருத்த வரை ஏபிஎஸ் வேரியன்ட் ஸ்டான்டர்டு மாடலை போன்றே காட்சியளிக்கிறது. முன்னதாக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வசதி விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. எனினும் இந்த ஆப்ஷன் ஃபேர்டு மாடலில் மட்டுமே வழங்கப்பட்டது.

    சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக இருக்கும் ஜிக்சர் மாடலிலும் தற்சமயம் ஏபிஎஸ் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடலின் முன்பக்க சக்கரத்தில் ஸ்பீடு சென்சார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



    அந்த வகையில் ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் 154.9 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 14 என்எம் டார்கியூ செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் சுசுகியின் ஜெட் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

    சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன், எல்இடி டெயில் லைட், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் மாடலில் ட்வின் எக்சாஸ்ட், 3-ஸ்போக் அலாய் வீல், ஸ்டெப்டு சீட் மற்றும் டூ-பீ்ஸ் ஃபென்டர் மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்குகிறது.

    இந்தியாவில் சுசுகி ஜிக்சர் ஏபிஎஸ் வேரியன்ட் மெட்டாலிக் ட்ரிடான்/புளு, கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், கேன்டி சோனோமா ரெட் / கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.87,250 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×