என் மலர்
இந்தியா

3டி வடிவமைப்பில் கட்டப்பட்ட கோவிலை படத்தில் காணலாம்.
ஐதராபாத்தில் உலகிலேயே முதல்முறையாக 3டி வடிவமைப்பில் கோவில்
- லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், சித்தி பேட்டை, முருகு பள்ளியில் 3டி வடிவிலான உலகிலேயே முதன்மையான கோவில் ஒன்றை கட்டி உள்ளனர்.
இந்த தனித்துவமான அமைப்பை 3டி பிரிண்ட் எடுக்க சுமார் 3 மாதங்கள் ஆனது. 4 ஆயிரம் சதுர அடி பரப்பில் 35.5 அடி உயரம் கொண்ட 3 கோபுரங்கள் உள்ளது.
இதேபோல் விநாயகருக்கு ஒரு கருவறையும் சிவபெருமானுக்கு ஒரு கருவறையும் தாமரை வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு கருவறை என 3 கருவறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த கோவில் 3டி பிரின்டிங் வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலை கட்டி முடிக்க 6 மாதங்கள் ஆனது.
இந்த கோவில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என கூறினர்.






