என் மலர்
இந்தியா

லிவ்-இன் பார்ட்னர் கற்பழிப்பு புகார்: மேக்-அப் கலைஞரை கொலை செய்து மனைவி உதவியுடன் உடலை ஓடையில் வீசிய நபர்
- மனைவிடன் சேர்ந்து கொலை செய்து ஓடையில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது
- கற்பழிப்பு புகாரை திரும்ப பெறாததால் கொலை செய்யப்பட்டுள்ளார்
திருமணமான நபருடன் வாழ்ந்து வந்த மேக்அப் கலைஞர், லிவ்-இன் வாழ்க்கை கசந்ததால் கற்பழிப்பு புகார் அளித்து, அதை திரும்பப்பெற மறுத்ததால் கொலை செய்யப்பட்டு, உடல் ஓடையில் வீசப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பெண் மேக்-அப் கலைஞர். சினிமா துறையில் மேக்-அப் கலைஞராக வேலைப்பார்க்கும் 48 வயது நபருடன் இவருக்கு தொடர்பு இருந்துள்ளது.
48 வயது நபருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. இருந்த போதிலும் இவர்கள் இருவரும் லிவ்-இன் பார்ட்னராக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இருவர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த நபர் மீது பெண் கலைஞர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார். 2019-ல் புகார் அளித்துள்ளார். தற்போது மனைவியுடன் வாழ்ந்து வரும் அந்த நபர், கற்பழிப்பு புகாரை திரும்பப்பெற வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், பெண் மேக்அப் கலைஞர் புகரை திரும்பப்பெற மறுத்துள்ளா்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி மேக்-அப் மேன் ஒருவர், பெண் கலைஞரின் தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது, உங்களது சகோதரியின் போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் உடனடியாக பெண் மேக்-அப் கலைஞரின் தங்கை, காவல் நிலையத்தில் தனது சகோதரியை காணவில்லை என புகார் அளித்தார். அப்போது, மேக்-அப் கலைஞர் ஒருவர் தனது சகோதரியை கொன்று விடுவதாக மிரட்டினார் என்ற தகவலையும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அவர் தனது சகோதரியை கொலை செய்திருக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், பெண் கலைஞர் உடலையும் தேடி வந்தனர்.
அப்போது 43 வயதான மேக்-அப் கலைஞர் தனது மனைவியுடன் சேர்ந்து பெண் மேக்-அப் கலைஞரை கொலை செய்து, உடலை சூட்கேஸில் அடைத்து, ஓடையில் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அந்த நபரும், அவரது மனைவியும், பெண் மேக்-அப் கலைஞரை நீரில் மூழ்கடித்து கொலை செய்து பின்னர், உடலை சூட்கேஸில் அடைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்குப்பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, வருகிற 16-ந்தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிவில் பெண் கலைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து முழு விவரம் தெரியவரும்.
ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிக்குள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே குஜராத் மாநிலத்தில் உள்ள ஓடையில் பெண் உடல் ஒன்று கண்டு எடுக்கப்பட்டதாகவும், யாரும் உடலை பெற வராததால் இறுதிச் சடங்கு நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் விபத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது மகாராஷ்டிராவில் மாநிலம் நைகான் போலீசார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுககளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






