search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் மாநிலத்தில் போதை பொருள் விற்கும் மாபியாக்களை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது?-  ராகுல்காந்தி கேள்வி
    X

     ராகுல் காந்தி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குஜராத் மாநிலத்தில் போதை பொருள் விற்கும் மாபியாக்களை எந்த ஆளும் சக்தி பாதுகாக்கிறது?- ராகுல்காந்தி கேள்வி

    • அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 42 பேர் உயிரிழப்பு.
    • 97 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி.

    குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் கள்ளச் சாராயம் அருந்தி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, வருத்தம் தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் பல பில்லியன் மதிப்புள்ள போதைப் பொருள்களும் தொடர்ந்து மீட்கப்படுவதாகவும், போதைப் பொருள் வணிகத்தில் ஈடுபட்டுள்ள மாபியாக்களுக்கு எந்த ஆளும் சக்தி பாதுகாப்பு கொடுக்கிறது என அவர் கேள்வி எழுப்பி உள்ளார். மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல் வாழ்ந்த இந்த பூமியில் இது கவலையளிக்கும் விஷயம் என்றும் தமது டுவிட்டர் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×