என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட சண்டையில் மருமகனை மிதித்தே கொன்ற மாமாக்கள்
    X

    பீகார் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட சண்டையில் மருமகனை மிதித்தே கொன்ற மாமாக்கள்

    • சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.
    • மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

    பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தொடங்கிய விவாதம் சர்ச்சையாக மாறி ஒரு இளைஞனின் உயிரைப் பறித்ததுள்ளது. குடிபோதையில் இருந்தபோது அந்த இளைஞனை அவரது சொந்த மாமாக்கள் மிதித்து கொன்றனர்.

    பீகாரின் சிவ்ஹார் மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் மஞ்சி (22) அவரின் மாமாக்கள் ராஜேஷ் மஞ்சி, துபானி மஞ்சி ஆகியோர் மத்தியப் பிரதேசத்தின் குணாவில் கூலி வேலை செய்து வருகின்றனர். ராஜேஷ் மற்றும் துஃபானி மஞ்சியின் மருமகன் (சகோதரி மகன்) சங்கர் மஞ்சி.

    இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் மூவரும் மது அருந்தி பேசிக் கொண்டிருந்தபோது, விவாதம் அரசியலுக்குத் திரும்பியது. சங்கர் ஒரு ஆர்ஜேடி ஆதரவாளர், அதே நேரத்தில் அவரது மாமாக்கள் இருவரும் நிதிஷ் குமாரின் ஜேடியு அபிமானிகள்.

    பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்ஜேடி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட ஜேடியு மகத்தான வெற்றியைப் பெற்றது.

    இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து குடிபோதையில் மூவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நிதிஷ் குமார் ஆதாரவாளர்களான மாமாக்கள் ராஜேஷும் துபானி மஞ்சியும் சேர்ந்து சங்கர் மஞ்சியைத் தாக்கினர். அவர்கள் சங்கரை அருகிலுள்ள சேற்றுக்கு இழுத்துச் சென்று மாறி மாறி மிதித்துள்ளனர்.

    சண்டை குறித்து உள்ளூர்வாசிகள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் சங்கர் மிதிக்கப்பட்டதில் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த போலீசார், சங்கரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    Next Story
    ×