என் மலர்tooltip icon

    இந்தியா

    முடிந்தால் என்னை அழித்து பாருங்கள்: பா.ஜனதாவுக்கு சவால் விட்ட உத்தவ் தாக்கரே
    X

    முடிந்தால் என்னை அழித்து பாருங்கள்: பா.ஜனதாவுக்கு சவால் விட்ட உத்தவ் தாக்கரே

    • எனக்கு எனது தந்தை மற்றும் மக்களின் ஆசிர்வாதம் உள்ளது.
    • எனது நாடு, எனது குடும்பம் என்று கூறுவது தான் உண்மையான இந்துத்வா ஆகும்.

    மும்பை :

    முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை அவரது கட்சியின் பத்திரிகையான 'சாம்னா' ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி கண்டார். அவரது பேட்டி 2-வது நாளாக சாம்னாவில் வெளியானது. அதில் உத்தவ் தாக்கரே கூறி இருப்பதாவது:-

    அயோத்தியில் கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பெறுப்பேற்க பா.ஜனதா தயாராக இல்லை. இந்த நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பெருமையை மட்டும் பா.ஜனதா எப்படி சொந்தம் கொண்டாட முடியும். சுப்ரீம் கோர்ட்டு தான் உண்மையில் ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்வை கொண்டு வந்தது.

    நீங்கள் (பா.ஜனதா) என்னை ஒழித்துக்கட்ட விரும்பினால் அதை செய்யுங்கள். அப்போது என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனக்கு எனது தந்தை மற்றும் மக்களின் ஆசிர்வாதம் உள்ளது.

    எனது நாடு, எனது குடும்பம் என்று கூறுவது தான் உண்மையான இந்துத்வா ஆகும். வயதை காரணம் காட்டி சரத்பவாரை ஓய்வு பெற வலியுறுத்தும் அஜித்பவாரின் கூற்று ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற பேச்சுகள் நமது மகாராஷ்டிரா பாரம்பரியத்திற்கு எதிரானது.

    எனது தந்தையும் சிவசேனா நிறுவனருமான மறைந்த பால் தாக்கரே தான் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய மந்திரி அமித்ஷாவையும் காப்பாற்றினார். ஒருவரின் உதவி இப்படி தான் திரும்ப கிடைக்கும் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்திற்கு பிறகு அப்போதைய துணை பிரதமர் எல்.கே. அத்வானியிடம் பேசி குஜராத் முதல்-மந்திரியாக இருந்த மோடியை பதவியில் இருந்து நீக்காமல் காப்பாற்றியது பால் தாக்கரே தான் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×