என் மலர்
இந்தியா

மே மாதம் திருப்பதிக்கு போறீங்களா? வெளியான முக்கிய தகவல்
- பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
- டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதற்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதன்படி, வருகிற மே மாதத்திற்கான சிறப்பு தரிசனம், ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் இன்று முதல் வெளியிடப்பட உள்ளன.
சுப்ரபாதம், தோமாலா, அர்ச்சனா சேவைகளுக்கான மே மாத ஒதுக்கீட்டிற்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் வருகிற 21-ம் தேதியும், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், வருகிற 24-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன.
இந்த டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






