என் மலர்
இந்தியா

திருப்பதிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த தேவஸ்தானம்
- திருப்பதியில் நேற்று 69,609 பேர் தரிசனம் செய்தனர்.
- ரூ 4.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதி:
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதிமலைக்கு பஸ், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது மலைப்பாதை விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனால் திருப்பதி மலைக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் விபத்தை தவிர்ப்பதற்காக பயண திட்டத்தை மாற்றி அமைத்து 1 மணி நேரம் முன்னதாக வரவேண்டும்.
மலைப்பாதையில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடும்.
எனவே வாகனங்களை மலைப்பாதையில் மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் நேற்று 69,609 பேர் தரிசனம் செய்தனர். 33,144 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 16 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






