என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த 4 ஆண்டுகளில் திருப்பதி கோவிலில் ரூ.4791 கோடி, 3,885 கிலோ தங்கம் டெபாசிட்
    X

    கடந்த 4 ஆண்டுகளில் திருப்பதி கோவிலில் ரூ.4791 கோடி, 3,885 கிலோ தங்கம் டெபாசிட்

    • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளில் தேவஸ்தானத்தின் தங்க டெபாசிட் அளவு 10,258 கிலோ 17 கிராம் ஆக இருந்தது.
    • இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தங்கம் டெபாசிட் அளவு 11,225 கிலோ 660 கிராம் ஆக அதிகரித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் ஏராளமான அளவில் குளறுபடிகள், முறைகேடுகள் நடைபெறுவதாக தெலுங்கு தேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

    இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:-

    ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் செலுத்தும் பணம், தங்கம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் டெண்டர் மூலம் வட்டியின் சதவீதம் நிர்ணயிக்கப்பட்டு அதிக வட்டி கொடுக்கும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.

    கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.15 ஆயிரத்து 938 கோடியே 68 லட்சம் தேவஸ்தானத்தின் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி அந்தத் தொகை ரூ.17,816 கோடியே 15 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் ஒரே ஆண்டில் 1,877 கோடியே 47 லட்சம் ரூபாய் தேவஸ்தானம் சேமித்துள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வங்கிகளில் தேவஸ்தானத்தின் தங்க டெபாசிட் அளவு 10,258 கிலோ 17 கிராம் ஆக இருந்தது.

    இந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தங்கம் டெபாசிட் அளவு 11,225 கிலோ 660 கிராம் ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 967 கிலோ 2 90 கிராம் தங்கத்தை தேவஸ்தான நிர்வாகம் சேமிப்பு செய்துள்ளது.

    கடந்த 4 ஆண்டுகளில் வங்கிகளில் ரூ.4,791 கோடியே 6 லட்சம் பணமும், 3885 கிலோ 920 கிராம் தங்கமும் வங்கிகளில் தேவஸ்தான கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×