என் மலர்tooltip icon

    இந்தியா

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடைபெறும் என அரசாணை வெளியீடு
    X

    மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு நடைபெறும் என அரசாணை வெளியீடு

    • சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • இந்த பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர்

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2027ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

    சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள பணியில் 34 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயன்படுத்தப்பட உள்ளனர்

    லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இந்த ஆண்டே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. பனி சூழ்ந்த மலைப் பிரதேசம் தவிர்த்த பிற மாநிலங்களில் மார்ச் 1 முதல் கணக்கெடுப்பு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி 4,147 சாதிகள் இருந்ததாக புள்ளி விவரத்தில் தகவல். தற்போது வரை 1931ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி இட ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் சமூக பொருளாதார ரீதியில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×