என் மலர்tooltip icon

    இந்தியா

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
    X

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

    • ஆசிரியர் ஜோசப் குட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
    • போலீசார் ஆசிரியர் ஜோசப்குட்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ஜோசப் குட்டி.

    பள்ளியில் இவரது வகுப்பில் படிக்கும் பிளஸ்-2 மாணவி ஒருவர், வீட்டில் மிகவும் சோர்வாக இருந்தார்.

    இதுபற்றி பெற்றோர் அவரிடம் கேட்டபோது பள்ளியில் ஆசிரியர் ஜோசப் குட்டி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், இதனால் வகுப்புக்கு செல்லவே பிடிக்கவில்லை எனவும் கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். அவர்கள் இதுபற்றி குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து மாணவியிடம் விசாரித்தனர். இதில் ஆசிரியர் ஜோசப் குட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து குழந்தைகள் நல அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் ஆசிரியர் ஜோசப்குட்டி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் வெளியானதும், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 3 பேர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதில் ஆசிரியர் ஜோசப் குட்டி தங்களுக்கும் இதுபோல செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தனர். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×