என் மலர்
இந்தியா

பெண் மந்திரி உருவ தோற்றம் கொண்டவரை ஆபாச படம் எடுக்க மிரட்டிய வாலிபர் கைது
- இளம்பெண்ணை மிரட்டியவர் கொச்சியை சேர்ந்த நந்தகுமார் என தெரியவந்தது. இவர் பத்திரிகையாளராகவும் உள்ளார்.
- அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், நந்தகுமார் என்பவர் தன்னை ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்துகிறார்.
நான் பெண் மந்திரி உருவ தோற்றத்தில் இருப்பதால், என்னை ஆபாச படம் எடுத்து, அதன்மூலம் பெண் மந்திரியை மிரட்ட திட்டமிட்டு உள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதில் இளம்பெண்ணை மிரட்டியவர் கொச்சியை சேர்ந்த நந்தகுமார் என தெரியவந்தது. இவர் பத்திரிகையாளராகவும் உள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நந்தகுமாரை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 294 பி, 509, 506 உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story