search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    65 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.60 லட்சம் பணம் பறித்த இளம்பெண்
    X

    65 வயது முதியவரை செக்ஸ் வலையில் வீழ்த்தி நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.60 லட்சம் பணம் பறித்த இளம்பெண்

    • நேர்மையாக நடக்கும் இணையதளங்கள் பல இருந்தாலும் சில இணையதளங்களில் பதிவு செய்வோர், வக்ர புத்தியுடன் செயல்படுவதும், இதில் சிக்குவோரை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது.
    • மும்பையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்து இளம்பெண் ஒருவரின் சதிவலையில் சிக்கி ரூ.60 லட்சம் வரை பணத்தை இழந்த கதை போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.

    சிலந்தி வலை விரித்து காத்திருந்து தனது உணவு மாட்டியதும், அதனை நசுக்கி ருசித்து சாப்பிடும்.

    இதுபோல இப்போதைய நவீன உலகில் இணையதளம் எனும் சிலந்தி சபலபுத்தி நபர்களை பிடித்து பணம் பறிக்க வலைவிரித்து காத்திருக்கிறது.

    அதற்கு வாட்ஸ்-அப், மிஸ்டு கால், சமூக வலைதளங்களில் நட்பு அழைப்பு கொடுத்து என பல்வேறு விதங்களில் குற்றவாளிகள் வலை விரித்து காத்திருக்கிறார்கள். இதனை அறியாமல் பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் மாட்டிக்கொண்டு முழிப்பது வாடிக்கையாகி விட்டது.

    இது ஒருபுறம் இருக்க மணப்பெண் தேடவும், நல்ல மணமகனை கண்டுபிடிக்கவும் இப்போது மேட்ரிமோனி இணையதளங்கள் பெருத்துவிட்டன. இவற்றில் பதிவு செய்தால் ஆயிரமாயிரம் பேரின் விலாசங்கள், விபரங்கள் நமக்கு கிடைத்துவிடும்.

    இவற்றில் நேர்மையாக நடக்கும் இணையதளங்கள் பல இருந்தாலும் சில இணையதளங்களில் பதிவு செய்வோர், வக்ர புத்தியுடன் செயல்படுவதும், இதில் சிக்குவோரை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதும் அடிக்கடி நடக்கிறது. அப்படி மும்பையை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்து இளம்பெண் ஒருவரின் சதிவலையில் சிக்கி ரூ.60 லட்சம் வரை பணத்தை இழந்த கதை போலீசாரையே திகைக்க வைத்துள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    மும்பையை சேர்ந்த 65 வயது முதியவரின் மனைவி இறந்து விட்டார். இதனால் தனிமையில் தவித்த அவர் மறுமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் தனது விபரங்களை பதிவு செய்து தகுதியான பெண் இருந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவிட்டார்.

    இதனை பார்த்து இளம்பெண் ஒருவர் முதியவரை தொடர்பு கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

    இதனை கேட்டு மகிழ்ந்த முதியவர், தனது செல்போன் எண்ணை அந்த பெண்ணுக்கு கொடுத்தார். அதன்பின்பு இருவரும் தினமும் செல்போனில் அரட்டை அடித்தனர். இதில் முதியவரின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை அந்த பெண் தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர்களின் பேச்சு செக்ஸ் பக்கம் திரும்பியது.

    இளம்பெண்ணின் ஆபாச பேச்சுகள் முதியவரை முறுக்கேற்றியது. இதனால் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னரே வீடியோ கால் மூலம் பேச தொடங்கினார்.

    ஒரு நாள் இரவு முதியவரும், இளம்பெண்ணும் வீடியோ காலில் பேச தொடங்கினர். அப்போது அந்த பெண் திடீரென தனது உடைகள் அனைத்தையும் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தார். இதை பார்த்த முதியவர் அரண்டு போனார்.

    அவர் பெண்ணிடம் என்ன, இப்படி இருக்கிறாய் என்று கேட்க, அந்த பெண்ணோ, முதியவரை பார்த்து என்னை போன்று உடைகளை துறந்து நிர்வாணமாக நிற்க உங்களால் முடியுமா, என எதிர்கேள்வி கேட்டார்.

    இளம்பெண் தனக்கு வலைவிரிக்கிறாள் என்பதை அறியாத முதியவர், தனக்கு மனைவியாக வரப்போகிறவள் தானே என்று எண்ணி அவரும் உடைகளை அகற்றி நிர்வாண போஸ் கொடுத்தார். இதனை அந்த பெண் ரகசியமாக பதிவு செய்து கொண்டார். அதன்பிறகு ஒரு நாள் அந்த முதியவரை தொடர்பு கொண்ட இளம்பெண், உங்கள் கணக்கில் இருந்து எனக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வையுங்கள் என்றார். முதியவர் ஏன்? என்று கேட்க உங்களின் நிர்வாண படங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. இதனை உங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பாமல் இருக்கவே இந்த பணம் என்றார். இதை கேட்டு பதறி போன முதியவர் உடனே அந்த பெண்ணின் கணக்கிற்கு பணம் அனுப்பி வைத்தார்.

    முதியவர் மடங்கி விட்டார் என்பதை அறிந்து கொண்ட பெண், அதன்பின்பு கொஞ்சம், கொஞ்சமாக ரூ. 60 லட்சம் வரை பிடுங்கி கொண்டார். அதன்பின்பு தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்ட முதியவர் மும்பை சைபர் கிரைம் போலீசாரை அணுகி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரை ஏமாற்றி பணம் பறித்து வந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

    இது பற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது:- இதுவரை ஆண்கள் தான் இதுபோன்ற குற்ற செயல்களை செய்து வந்தனர். இப்போது பெண்களும் இதனை கற்றுக்கொண்டனர். இதில் இருந்து தப்பிக்க நாம்தான் இணைய தளத்தை கவனமாக கையாள வேண்டும். இல்லையேல் இதுபோன்ற இழப்புகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும், என்றனர்.

    Next Story
    ×