search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்
    X

    மதுபோதையில் ஓட்டலில் இளம்பெண்களுடன் மாப்பிள்ளை நடனமாடியதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

    • வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
    • இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் பி.வி.ரெட்டி காலனியை சேர்ந்தவர் ரவி பாபு. இவர் சித்தூரில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகன் வைஷ்ணவ் (வயது 28). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைஷ்ணவ்க்கு ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.

    சில மாதங்கள் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகி வந்தனர். இதையடுத்து ஒருவருக்கு ஒருவர் தங்களது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு மணி கணக்கில் போனில் பேசி வந்தனர்.

    வைஷ்ணவ் தங்களது பெற்றோரிடம் ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார். அவரது பெற்றோர் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து வைஷ்ணவ் பெற்றோர் இளம் பெண்ணின் பெற்றோரிடம் பேசியதால் அவர்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வைஷ்ணவ்க்கும் இளம்பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் வெகு விமரிசையாக நடந்தது.

    அப்போது வைஷ்ணவ் தனது வருங்கால மனைவிக்காக ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.2 லட்சம் மதிப்பில் வைர மோதிரம், ரூ.10 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள், ஓட்டல் மற்றும் உணவுக்காக ரூ.30 லட்சம் என ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளார்.

    வைஷ்ணவ் மிகுந்த உற்சாகத்தில் திருமண நாளை நோக்கி எதிர்பார்த்து காத்திருந்தார்.

    கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி வைஷ்ணவுக்கு போன் செய்த இளம் பெண் அவசரமாக ரூ.7 லட்சம் தேவைப்படுவதாக கூறினார். தன்னிடம் இருந்த ரூ.5 லட்சம் மற்றும் தனது தந்தையிடமிருந்து ரூ.2 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.

    அப்போது இளம் பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு இளம் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார்.

    இதனால் இளம்பெண்ணிற்கும் வைஷ்ணவுக்கும் இடையே ஹோட்டலில் தகராறு நடந்தது.அப்போது வைஷ்ணவ் இளம்பெண்ணை தாக்கி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் வீட்டிற்கு வேகமாக சென்றார் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவர்கள் வைஷ்ணவ் பெற்றோரை அழைத்து உங்கள் குடும்பம் எங்களது அந்தஸ்திற்கு ஏற்றது இல்லை. மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை தாக்கியதால் திருமணத்திற்கு விருப்பம் இல்லை. என தெரிவித்தனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவ் மணமகள் வீட்டாரிடம் எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்.

    அவர்கள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை மேலும் வைஷ்ணவ் தங்களது மகளை குடிபோதையில் தாக்கியதாக வைஷ்ணவி மற்றும் அவரது பெற்றோர் மீது ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×