search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பொது இடத்தில் வாஷிங் மெஷின் வைத்த தகராறு- பெண்ணை கல்லால் தாக்கி கொலை
    X

    பொது இடத்தில் வாஷிங் மெஷின் வைத்த தகராறு- பெண்ணை கல்லால் தாக்கி கொலை

    • 2 வீட்டிற்கும் பொதுவான இடத்தில் பத்மாவதி தனது வாஷிங் மிஷினை வைத்து துணி துவைத்து வந்தார்.
    • வீட்டிலிருந்த இளைய மகள் தனது தந்தை மனோகருக்கு போன் செய்து தாயை வேமா நாயக் குடும்பத்தினர் தாக்குவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம், கதிரி அடுத்த மாசனம் பேட்டையை சேர்ந்தவர் மனோகர்.டான்ஸ் மாஸ்டர். இவரது மனைவி பத்மாவதி. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வேமா நாயக். அவரது மகன் பிரகாஷ் நாயக். மனோகர் வீட்டின் அருகில் உள்ள பொது வழியாக வேமா நாயக் தனது வீட்டிற்கு செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் 2 வீட்டிற்கும் பொதுவான இடத்தில் பத்மாவதி தனது வாஷிங் மிஷினை வைத்து துணி துவைத்து வந்தார்.

    பொது இடத்தில் வாஷிங் மெஷின் வைத்து துணி துவைப்பதால் தங்களுக்கு சிரமமாக இருப்பதாக வேமா நாயக் குடும்பத்தினர் மனோகர் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை மனோகர் தனது மகளுடன் டான்ஸ் வகுப்பிற்கு சென்று இருந்தார். அப்போது மீண்டும் 2 குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதில் ஆத்திரம் அடைந்த வேமா நாயக் மற்றும் அவரது மகன் பிரகாஷ் நாயக் இருவரும் அருகில் இருந்த கற்களை எடுத்து பத்மாவதியை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

    மேலும் ஆத்திரம் அடங்காத வேமா நாயக் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பத்மாவதி வயிற்றில் சரமாரியாக குத்தி விட்டு தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    வீட்டிலிருந்த இளைய மகள் தனது தந்தை மனோகருக்கு போன் செய்து தாயை வேமா நாயக் குடும்பத்தினர் தாக்குவதாக தெரிவித்தார்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மனோகர் மற்றும் அருகில் இருந்தவர்கள் பத்மாவதியை மீட்டு கதிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லும் வழியில் பத்மாவதி பரிதாபமாக இருந்தார்.

    இது குறித்து கதிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தந்தை மற்றும் மகனை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×