என் மலர்
இந்தியா

நாங்கள் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு மணம் முடித்து வைப்போம்- சுயேச்சை வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கை
- கர்நாடக சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டம் அரபாவி சட்டசபை தொகுதியில் குருபுத்ர கெம்பண்ணா குல்லூர் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
- ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெலகாவி மாவட்டம் அரபாவி சட்டசபை தொகுதியில் குருபுத்ர கெம்பண்ணா குல்லூர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதேபோல், அவரது சகோதரர் புந்தலிக்க கல்லூர் என்பவர் கோகாக் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவர்கள் 2 பேரும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில், 'நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால்...' அரபாவி, கோகாக் தொகுதிகளில் திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் திருமணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பெண் பார்த்து மணம் முடித்து வைப்போம் என்று அறிவித்துள்ளனர்.
அவர்களின் இந்த தேர்தல் அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விவசாயம் செய்து வரும் வாலிபர்களை பெண்கள் திருமணம் செய்ய மறுப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், ஜனதாதளம்(எஸ்) கட்சி தனது தேர்தல் அறிக்கையில், விவசாயிகளை திருமணம் செய்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






