search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் கடற்பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 2 பேர் கைது
    X

    குஜராத் கடற்பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 2 பேர் கைது

    • இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தின் கட்ச் கடற்பகுதியில் உள்ள ஹராமி நல்லா பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் சிலர் 9 படகுகளில் இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

    அப்போது அங்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் வருவதை பார்த்ததும் 3 படகுகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் தப்பி சென்றனர்.

    அவர்களை தேடும் பணியில் இந்திய படையினர் ஈடுபட்டனர். இதில் 2 பாகிஸ்தான் மீனவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்தனர். அவர்கள் பாகிஸ்தானின் ஜீரோ பாயிண்ட் கிராமத்தை சேர்ந்த சதா ஹூசன், அலி பக்‌ஷா என்பது தெரிய வந்தது.

    பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்ய துப்பாக்கி சூடு நடத்த வேண்டியதாகி விட்டதாகவும், இரண்டு பேருக்கும் கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் எல்லை பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஹராமி நல்லாவில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதிக்குள் பாகிஸ்தான் அத்துமீறி நுழைவதும், இந்திய பாதுகாப்பு படைகளை பார்த்ததும் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

    Next Story
    ×