search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில் 8 மணி நேரம் மூடல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    திருப்பதி கோவில் 8 மணி நேரம் மூடல்

    • கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.
    • 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 28-ம் தேதி திருப்பதி கோவில் 8 மணிநேரம் மூடப்படுகிறது.

    இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-

    வருகிற 29-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 2.22 மணிக்கு சந்திரகிரகணம் நிறைவடையும்.

    கிரகண நேரத்திற்கு 6 மணி நேரத்திற்கு முன் கோவில் கதவுகளை மூடுவது வழக்கம்.

    எனவே, 28-ந்தேதி இரவு 7.05 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் மூடப்படும்.

    29-ந்தேதி அதிகாலை 3.15 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுத்தம் செய்து கிரகண பரிகார பூஜை, சுப்ரபாத சேவையும் மேற்கொள்ளப்பட உள்ளது. சந்திர கிரகணத்தை யொட்டி கோவில் கதவுகள் 8 மணி நேரம் மூடப்படும்.

    இதன் காரணமாக 28-ந் தேதி சகஸ்ர தீபலங்கார சேவை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×