என் மலர்

  இந்தியா

  டெல்லியில் பேரணிக்கு திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்- போக்குவரத்து மாற்றம்
  X

  டெல்லியில் பேரணிக்கு திரண்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள்- போக்குவரத்து மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டெல்லி எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
  • டெல்லியில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

  புதுடெல்லி:

  மத்திய அரசின் 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெறக்கோரி கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை தொடங்கினர்.

  ஆகஸ்டு 9-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் 2021 டிசம்பர் 11-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற்றது. டெல்லி எல்லைகளில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை அடுத்து மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற்றது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.

  போராட்டத்தின் முடிவில், உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தனர்.

  இந்நிலையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான பாரதீய கிஸான் மோர்ச்சா சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் கிஸான் மகான் பஞ்சாயத்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று முதலே டெல்லிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

  இந்த பேரணியில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம் என சம்யுக்த் கிஸான் மோர்ச்சா அமைப்பு தெரிவித்துள்ளது. இதையொட்டி டெல்லியில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.

  மேலும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

  Next Story
  ×