search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் தேர்தல்- வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் மோடி
    X

    குஜராத் தேர்தல்- வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் மோடி

    • 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    • பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

    குஜராத் மாநிலத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, குஜராத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

    இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 93 தொகுதிகள் குஜராத்தின் மத்திய பகுதி மற்றும் வடக்குப் பகுதியில் இந்த தொகுதிகள் அமைந்துள்ளன. மொத்தம் 2.54 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்களிப்பதற்காக 14 ஆயிரத்து 975 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்தலில் 833 வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அகமதாபாத் நகரில் உள்ள பள்ளியில் பிரதமர் மோடி வாக்குசாவடி மையத்திற்கு சென்று வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கூறியதாவது:-

    குஜராத், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் டெல்லி மக்களால் ஜனநாயக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தேர்தலை அமைதியாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×