search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 9 ஆயிரம் வழக்குகள்
    X

    கேரளாவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 2 லட்சத்து 9 ஆயிரம் வழக்குகள்

    • நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன.
    • பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன.

    திருவனந்தபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு 19-ந்தேதி நடைபெற்றது.

    2-வது கட்ட தேர்தல் வருகிற 26-ந்தேதி கேரள மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது. கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுவதும் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளன. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள், கேரளாவில் ஒன்றையொன்று எதிர்த்து களத்தில் உள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் வெற்றியை எதிர்பார்த்து போட்டியில் உள்ளது.

    இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சி-விஜில் மூலம் ஏராளமான புகார்கள் வந்துள்ளன. கடந்த மாதம் 16-ந்தேதி முதல் நேற்று வரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 661 புகார்கள் வந்துள்ளன. இதில் அங்கீகரிக்கப்படாத சுவரொட்டிகள் மற்றும் பேனர்கள் தொடர்பாக 1 லட்சத்து 83 ஆயிரத்து 842 புகார்களும், சொத்துக் குவிப்பு தொடர்பாக 10 ஆயிரத்து 999 புகார்களும் வந்துள்ளன.

    மேலும் பணம் விநியோகம், மது வழங்குதல், பரிசு அளித்தல் உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்து, 2 லட்சத்து 6 ஆயிரத்து 152 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சய் கவுல் தெரிவித்துள்ளார். 3 ஆயிரத்து 83 புகார்கள் ஆதாரமற்றவை என நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    Next Story
    ×