என் மலர்

  இந்தியா

  இந்தியாவில் இனி யாருக்கும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை- இதய நோய் நிபுணர் சொல்கிறார்
  X

  இந்தியாவில் இனி யாருக்கும் கொரோனா தடுப்பூசி தேவையில்லை- இதய நோய் நிபுணர் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன.
  • பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது.

  இந்தியாவை பூர்வீகமாக கொண்டவா் இங்கிலாந்து மருத்துவா் அசீம் மல்ஹோத்ரா. கொரோனாவுக்கு எதிரான எம்ஆா்என்ஏ தடுப்பூசிகள் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் வலியுறுத்துவோரில் முன்னணியில் உள்ளாா். இந்தியா வந்துள்ள அவா், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி வருமாறு:-

  அமெரிக்காவின் பைசர், மாடா்னா போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் எம்.ஆர்.என்.ஏ. கொரோனா தடுப்பூசிகள் உடலில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளன. எனவே, அந்த தடுப்பூசிகளின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்று சா்வதேச அளவில் குரல்கள் எழுந்துள்ளன.

  கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் வரை, எம்.ஆர்.என்.ஏ. மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் ஒன்றுடன் ஒன்று ஒப்பிடப்பட்டு, அதன் முடிவுகள் ஆய்விதழ் ஒன்றில் வெளியிடப்பட்டது. அந்த முடிவில், இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடா்பான பாதிப்புகள், மாரடைப்பு, பக்கவாதம், இளவயதினருக்கும் முதியவா்களுக்கும் ரத்தம் உறைவது, சில உயிரிழப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துவதில் பைசர் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ. தடுப்பூசியை விட, கோவிஷீல்ட் தடுப்பூசி மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இங்கிலாந்தில் கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து 97 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னா், சுமார் 10 சதவீதம் பேருக்கு, அதாவது 8 லட்சம் பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டன. அந்தப் பக்க விளைவுகள் லேசாகவோ, மிதமாகவோ இல்லை. அதிகமாக இருந்தது. இதுபோல முன் எப்போதும் நடந்தது இல்லை.

  கடுமையான பக்க விளைவுகள் காரணமாக சில நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் பயன்பாடு நிறுத்தப்பட்டது. அப்படி இருக்கும்போது, இந்தியாவில் அந்தத் தடுப்பூசி செலுத்தப்படுவது ஏன்? அந்தத் தடுப்பூசி இந்தியாவில் பயன்படுத்தப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்புத் தன்மையை முழுமையாக மறுஆய்வு செய்ய வேண்டும்.

  கோவேக்சின் தடுப்பூசியின் தரவுகளை ஆராய்ந்ததில், அந்தத் தடுப்பூசியால் குறிப்பிடும்படி பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது போலவே தென்படுகிறது. ஆனால், பிற தடுப்பூசிகள் ஆய்வுக்குட்படுத்தப்படும் நிலையில், கோவேக்ஸினும் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

  90 சதவீதத்துக்கும் அதிகமான இந்தியா்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர் கொண்டனா். அவா்களுக்கு உடலில் இயற்கையாக நோய் எதிா்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இயற்கையாக உருவாகும் நோய் எதிா்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் வாய்ந்தது.

  அது கடுமையான உடல்நல பாதிப்புகளில் இருந்தும், மரணத்திலிருந்தும் பாதுகாக்கிறது. எனவே, கொரோனா குறித்து இந்திய மக்களும் அரசும் கவலை அடைய வேண்டாம்.

  இனி இந்தியாவில் யாருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதேபோல பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. அதன்மூலம் பக்க விளைவுகள் அதிகரிக்கலாம். மென்மேலும் தடுப்பூசி தவணைகளை செலுத்திக் கொள்ளும்போது கடுமையான பக்க விளைவுகளால் அவதிப்பட அதிக வாய்ப்புள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×