என் மலர்
இந்தியா

டெல்லியில் பயங்கரவாதி கைது
- உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
- என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுடெல்லி:
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முக்கிய பயங்கரவாதி அராபத் அலி என்பவரை டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கென்யாவின் நைரோபியில் இருந்து டெல்லி திரும்பிய அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர் 2020-ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்து பிரசாரம் செய்ததாகவும், பயங்கரவாத செயல்களுக்கு சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த இவர் அப்பாவி இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி, உலக அளவிலான பயங்கரவாத குழுக்களில் சேர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் அராபத் அலிக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






