என் மலர்
இந்தியா

ஒரே ஊசி மூலம் 39 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டவர் கைது
- 15 வயதுக்குட்பட்ட 39 மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் தடுப்பூசி போட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து சுகாதாரத்துறை ஊழியரை கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது அந்த பள்ளியில் 15 வயதுக்குட்பட்ட 39 மாணவர்களுக்கு ஒரே ஊசியை பயன்படுத்தி சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் தடுப்பூசி போட்டார். இதுதொடர்பாக புகார் எழுந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுகாதாரத்துறை ஊழியர் ஜிதேந்திர அகிர்வார் தடுப்பூசி போட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story