search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோடு சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உறுதி
    X

    கோழிக்கோடு சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உறுதி

    • கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
    • புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் உள்ளாகி இருக்கின்றனர். அங்கு டெங்கு மற்றும் எலி காய்ச்சல் வேகமாக பரவி உள்ளது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுவன் அதிக காய்ச்சல், கழுத்து மற்றும் தலைவலியால் அவதிப்பட்டுள்ளான்.

    கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் புனேயில் உள்ள பரிசோதனை மையத்திற்கு சிறுவனிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அனுப்பப்பட்டன. அங்கு பரிசோதித்ததில் அந்த சிறுவனுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×