என் மலர்tooltip icon

    இந்தியா

    கொல்கத்தா: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்- வாலிபர் கைது
    X

    கொல்கத்தா: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்- வாலிபர் கைது

    • போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.
    • முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசாங்கத்தை நவ்சாத் சித்திக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் அகவிலைப்படியை உயர்த்த கோரி மாநில அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி எம்.எல்.ஏ. நவ்சாத் சித்திக் உரையாற்றி விட்டு மேடையில் இருந்து இறங்கினார். அப்போது வாலிபர் ஒருவர் எம்.எல்.ஏ.வை மறித்து தகராறு செய்து கன்னத்தில் அறைய முயன்றார். பின்னர் நவ்சாத் சித்தித்தை தள்ளி விட்டார். உடனே அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தாக்கினர். போலீசார் அங்கு வந்து வாலிபரை கைது செய்து அழைத்து சென்றனர்.

    முதல்-மந்திரி மம்தாபானர்ஜி அரசாங்கத்தை நவ்சாத் சித்திக் கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நடந்த பேரணியின் போது அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×