என் மலர்

    இந்தியா

    கொச்சி விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது
    X

    கொச்சி விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கேரளா வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன.
    • விமான பயணிகளை சுங்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கேரளா வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக புகார்கள் உள்ளன. இதனை அவ்வப்போது விமான நிலைய சுங்கத்துறையினர் மடக்கி பிடித்து தங்கத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கொச்சி விமான நிலையம் வந்த பயணிகளில் 2 பேர் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விமான பயணிகளை சுங்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில் அபுதாபியில் இருந்து விமானத்தில் வந்த மலப்புரம் அப்துல் சலீம் என்பவரது மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்தபோது 3 கேப்சூல்களில் தங்கம் கடத்தி வருவது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.38 லட்சம் மதிப்பிலான 873.98 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.

    இதேபோல் மலப்புரத்தைச் சேர்ந்த சகீல் என்ற பயணியும் அபுதாபியில் இருந்து மற்றொரு விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக பிடிபட்டார். அவரிடம் இருந்து ரூ.1.2 கோடி மதிப்பிலான 1.8 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.இவர் கேப்சூல் வடிவிலும், உள்ளாடைகளில் பேஸ்ட் வடிவிலும் தங்கத்தை கடத்தி வந்துள்ளார். பின்னர் 2 பேரும் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.

    Next Story
    ×