என் மலர்

    இந்தியா

    மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை விஷம் கொடுத்து கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை
    X

    தற்கொலை செய்து கொண்ட மணிகுட்டன் மற்றும் குடும்பத்தினர்.


    மனைவி, குழந்தைகள் உள்பட 4 பேரை விஷம் கொடுத்து கொன்று விட்டு ஓட்டல் அதிபர் தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஓட்டல் நடத்தி வந்த மணி குட்டனுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
    • இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றிங்கல், சாத்தான்பாறையை சேர்ந்தவர் மணி குட்டன். அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    மணிகுட்டனின் மனைவி சிந்து, இவர்களுக்கு அமேஷ், ஆதிஷ் என்று 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் மணிகுட்டனின் அத்தை தேவகி என்பவரும் வசித்து வந்தார்.

    இவர்கள் 5 பேரும் சாத்தன்பாறையில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இன்று காலையில் இவர்களின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். உள்ளே இருந்து எந்த சத்தமும் கேட்காததால் அவர்கள் இது பற்றி ஆற்றிங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மணிகுட்டன் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். மற்றவர்கள் அனைவரும் விஷம் குடித்து இறந்து கிடந்தனர்.

    அதிர்ச்சி அடைந்த போலீசார் 5 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். இதில் மணிகுட்டன் தனது மனைவி, அத்தை மற்றும் 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது.

    மேலும் ஓட்டல் நடத்தி வந்த மணி குட்டனுக்கு கடன் தொல்லை இருந்ததாகவும், இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×