search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு 25-ந்தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை
    X

    கேரளாவில் கொளுத்தும் வெயில்: 10 மாவட்டங்களுக்கு 25-ந்தேதி வரை உயர் வெப்பநிலை எச்சரிக்கை

    • வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
    • இடுக்கி மாவட்டத்தில் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை காலம் தொடங்குவற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. பாலக்காடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர். அதே வேளையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்தது. இதனால் அந்த மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.

    இந்நிலையில் பத்தினம் திட்டா, எர்ணாகுளம், கண்ணூர், ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், கொல்லம், திருச்சூர், கோழிக்கோடு, பாலக்காடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு வருகிற 25-ந்தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் உயர் வெப்பநிலை எச்சரிக்கை மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மேலும் திருச்சூர் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும், மற்ற மாவட்டங்களிலும் இயல்பை விட வெயில் அதிகமாக அடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    உயர் வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களில் பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் திருச்சூர், கண்ணூர் ஆகிய 7மாவட்டங்களிலும், இடுக்கி மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×