என் மலர்
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காத்திருப்பு அறைகள் நிரம்பியதால் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் சாலையில் அமர்ந்திருந்த காட்சி.
திருப்பதியில் 3-வது நாளாக அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
- ஆக்டோபஸ் கட்டிடம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
- பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, பால், டீ, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3-வது நாளாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோடை விடுமுறை காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர்.
பக்தர்கள் வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மலைக்கு செல்ல மணி கணக்கில் காத்திருந்தனர். மேலும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் பக்தர்களால் நிரம்பி வழிகிறது.
இதனால் ஆக்டோபஸ் கட்டிடம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.
நேரடி இலவச தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 30 மணி நேரம் கர்திருந்து தரிசனம் செய்தனர். நேர ஒதுக்கீடு முறையில் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 12 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, பால், டீ, தண்ணீர் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 86,721 பேர் தரிசனம் செய்தனர். 39,859 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.87 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.






