search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
    X

    தங்கம் இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு

    • தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
    • தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    புதுடெல்லி:

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் அதிகாரித்து வரும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க வரி 12.5 சதவீதமாக இருக்கும். தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 107 டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க இறக்குமதி செய்யப்பட்டது.

    தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×