என் மலர்
இந்தியா

தொழில்நுட்ப கோளாறு- டெல்லி விமானம் அவசரமாக தரை இறக்கம்
- என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார்.
- சிறிது நேரம் கழித்து அதில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டெல்லியில் இருந்து ராஞ்சிக்கு இன்று காலை 7.40 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உணர்ந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அந்த விமானம் திருப்பபட்டு மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் 8.20 மணிக்கு பத்திரமாக தரை இறங்கியது. சிறிது நேரம் கழித்து அதில் பயணம் செய்த பயணிகள் வேறு ஒரு விமானத்தின் மூலம் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story






