search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டெல்லியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்

    • இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர் என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
    • இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் இருந்து புறப்பட்டு துபாயில் தரையிறக்க வேண்டிய ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜித-11 விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர் என்றும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " ஸ்பைஸ்ஜெட் பி737 விமானம் இயக்கும் விமானம் எஸ்ஜி-11 (டெல்லி-துபாய்) இன்டிகேட்டர் லைட் செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் பத்திரமாக இறங்கினார்கள்.

    விமானத்தின் இடது தொட்டியில் இருந்து எரிபொருள் அளவு குறைவதைக் கவனித்ததை அடுத்து, விமானம் தரையிறக்கப்பட்டது என விமான நிர்வாகம் கூறியது" என்றார்.

    Next Story
    ×