என் மலர்
இந்தியா

திருப்பதியில் பரிணய உற்சவத்தையொட்டி ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்- 36 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
- வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் கல்யாண கட்டாகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
- சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து நின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வார விடுமுறை நாள் என்பதால் இன்று பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் திருப்பதி மலை முழுவதும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் கல்யாண கட்டாகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்து நின்றனர்.
போதிய அளவு பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காமல் திறந்தவெளியில் தங்கினர். திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்வதால் பக்தர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருப்பதி மலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-வது நாளான நேற்று இரவு ஏழுமலையான் தங்க குதிரை வாகனத்தில் கோவில் வளாகத்தில் சுற்றி வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது திரளான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் நேற்று 90, 721 பேர் தரிசனம் செய்தனர். 50, 599 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.28 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. சாமி தரிசனத்துக்கு 36 மணி நேரமானது.
#WATCH | Andhra Pradesh: A large number of devotees queue up to offer prayers at the Tirupati Balaji Temple, Tirumala. pic.twitter.com/DUJ1qEOo48
— ANI (@ANI) May 19, 2024






