search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தொங்கு பாலம் அறுந்து விழுந்து பயங்கர விபத்து: 32 பேர் பலி- நூற்றுக்கணக்கானோர் மாயம்- மீட்பு பணி தீவிரம்

    • மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி நிதியதவி.
    • மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்நிலையில் சாத் பூஜையில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுள்ளனர். இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், பாலம் இடிந்து விழுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆற்றில் பலரும் மூழ்கினர். இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து ஆற்றில் விழுந்த பலரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் தற்போதைய நிலவப்படி 32 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மோர்பியில் இடிந்து விழுந்த பாலம் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் திறக்கப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    மேலும், மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×