search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம்- பஸ் மீது கல்வீசிய பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
    X

    நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரம்- பஸ் மீது கல்வீசிய பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

    • லட்சுமியை பஸ்சின் டிரைவர் அதே பஸ்சில் ஏற்றிக்கொணடு முனிர்பத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
    • பணத்தை லட்சுமி அபராதமாக செலுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டு சென்றார்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலம் இல்கல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கொப்பல் மாவட்டம், ஹுலிகி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் சொந்த ஊர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த கொப்பல்-ஹோசப்பேட்டை இடையே செல்லும் அதிவேக பஸ் அந்த பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. நீண்டநேரம் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த லட்சுமி அந்த பஸ் மீது கல்வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

    இதைத்தொடர்ந்து லட்சுமியை பஸ்சின் டிரைவர் அதே பஸ்சில் ஏற்றிக்கொணடு முனிர்பத் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அங்கு போலீசாரிடம் லட்சுமி தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை லட்சுமி அபராதமாக செலுத்திவிட்டு தனது சொந்த ஊருக்கு அதே பஸ்சில் புறப்பட்டு சென்றார்.

    Next Story
    ×