search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆந்திராவில் நாளை முதல் நடிகர் பவன் கல்யாண் வாராஹி யாத்திரை

    • பவன் கல்யாண் ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல முடிவு செய்தார்.
    • ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலிருந்து இவரது யாத்திரை தொடங்குகிறது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி தொடங்கியுள்ளார்.இவர் சந்திரபாபு நாயுடு மற்றும் பாஜக உடன் கூட்டணியில் உள்ளார்.

    பவன் கல்யாண் ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல முடிவு செய்தார். இதற்காக வாராஹி என்ற ராணுவம் வாகனம் போன்ற பிரத்தியேக வாகனத்தை தயார் செய்துள்ளார்.

    பவன் கல்யாண் தனது வாராஹி வாகனத்தில் ஆந்திராவில் நாளை முதல் 23-ந் தேதி வரை யாத்திரை செல்கிறார். ஸ்ரீகாக்குளம் மாவட்டத்திலிருந்து இவரது யாத்திரை தொடங்குகிறது.

    இதனையொட்டி குண்டூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று பவன் கல்யாண் யாக பூஜை செய்தார்.

    புதிய தலைமை அலுவலகத்தில் நேற்று காலை கணபதி ஹோமம், அங்குரார் பணத்துடன் யாகசாலை பூஜை நடந்தது. இந்த யாகசாலை பூஜையில் 30-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர்.

    யாக பூஜையின் போது நடிகர் பவன் கல்யாண் வெள்ளை நிற பட்டு வேஷ்டி அணிந்து தரிசனம் செய்தார்.

    வாராகி யாத்திரை வெறும் ஊர்வலமாக இருக்காது. அடித்தட்டு மக்களை இதன் மூலம் தொடர்பு கொள்வேன். அவர்களின் பிரச்சினைகள் இதன் மூலம் எனக்கு தெரிய வரும்.

    அவற்றை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து உத்தியை உருவாக்குவேன். 175 தொகுதிகளில் கண்டனக் கூட்டங்களை நடத்துவேன்.

    ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் வாராகி யாத்திரையில் மாணவர்கள் இளைஞர்கள் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×