என் மலர்tooltip icon

    இந்தியா

    தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி
    X

    ரெயிலை கவிழ்க்க தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டுள்ள இரும்பு ராடு


    தண்டவாளத்தில் இரும்பு ராடுகளை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி

    • ரெயில் தண்டவாளத்தில் இரும்பு ராடு இருப்பதை கண்ட டிரைவர் திடீரென ரெயிலை நிறுத்தினார்.
    • ரெயில்வே தண்டவாளம் தீ வைத்து எரிக்கப்பட்டு தண்டவாளத்தின் மத்தியில் இரும்பு ராடுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கலிகிரி-வால்மீகிபுரம் இடையே ரெயில்வே தண்டவாளத்திற்கு நேற்று மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும் 2 தண்டவாளங்களுக்கு இடையே இரும்பு ராடு மற்றும் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை சித்தூர் அடுத்த பாகலாவிலிருந்து தர்மாவரத்திற்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டு இருந்தது. கலிகிரி வால்மீகி புரம் அருகே சென்றபோது ரெயில் தண்டவாளத்தில் இரும்பு ராடு இருப்பதை கண்ட டிரைவர் திடீரென ரெயிலை நிறுத்தினார். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    அதிகாரிகள் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.அப்போது ரெயில்வே தண்டவாளம் தீ வைத்து எரிக்கப்பட்டு தண்டவாளத்தின் மத்தியில் இரும்பு ராடுகள் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடுகளை அகற்றி அப்பகுதியில் ரெயிலை டிரைவர் மெதுவாக இயக்கி சென்றார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்வே தண்டவாளத்தில் இரும்பு ராடு இருப்பதைக் கண்டு சாமர்த்தியமாக ரெயிலை நிறுத்தி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த ரெயில் டிரைவருக்கு பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×