என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 114 ஆக குறைந்தது
    X

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 114 ஆக குறைந்தது

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 175 பேர் மீண்டுள்ளனர்.
    • இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் புதிதாக 114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 173 ஆகவும், நேற்று 159 ஆகவும் இருந்தது. தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 75 ஆயிரத்து 95 ஆக உயர்ந்தது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 175 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 4 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,658 ஆக நீடிக்கிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை நேற்றை விட 61 குறைந்துள்ளது. அதாவது தற்போது 3,845 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    Next Story
    ×