search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வருமானவரி உச்சவரம்பு உயர்வு 1 கோடி பேர் பயன்பெறுவார்கள்
    X

    வருமானவரி உச்சவரம்பு உயர்வு 1 கோடி பேர் பயன்பெறுவார்கள்

    • கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.
    • 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த 1-ந்தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பலரும் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்துவதாக அறிவித்தார். இந்தியாவில் 6 கோடிக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இப்போது ரூ.3 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி கடந்த ஆண்டு மார்ச் இறுதி வரை 6.4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். இதில் 80 சி பிரிவின்படி முதலீடுகள் மீதான விலக்குகள் காரணமாக ரூ.84 ஆயிரம் கோடிக்கு வருமானவரி தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வருமானவரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதன் காரணமாக சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய வரிவிதிப்பு நடைமுறை மூலம் அனைத்து வரி செலுத்துவோருக்கும் மிகப்பெரிய அளவில் ஆறுதலாக அமைந்துள்ளது.

    தனிநபர்கள் ரூ.7 லட்சம் வரை எந்த வரியையும் செலுத்த வேண்டியதில்லை. சேமிப்பின் காரணமாக அவர்கள் போடக்கூடிய விலக்குகளில் அளவை பொருட்படுத்த வேண்டியதில்லை என்றார்.

    Next Story
    ×