search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஸ்விகி திட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ஸ்விகி திட்டம்

    • தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது.
    • 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது.

    பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'ஸ்விகி'யில் 400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 'ஸ்விகி' நிறுவனம் 380 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 'ஸ்விகி' நிறுவனம் இந்த ஆண்டில் மேலும் சுமார் 400 ஊழியர்களை அதாவது பணியாளர்களில் 7 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்விகி' நிறுவனம் தற்போது 2-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி உள்ளது.


    தொழில் நுட்பத்துறையில் நீடித்த பின்னடைவால் செலவுகளை குறைத்து மறுசீரமைக்க 'பேடிஎம்' மற்றும் 'பிளிப்கார்ட்' போன்றவற்றுடன் 'ஸ்விகி' இணைகிறது. இதைத்தொடர்ந்து 'ஸ்விகி' நிறுவனம் உணவு விநியோக சந்தையில் அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறது. அதன் அடிப்படையில் செலவின குறைப்பு நடவடிக்கையாக மேலும் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

    Next Story
    ×